திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு.. பார்வையாளர்களை மிரள வைத்த காட்சி.. எங்கு தெரியுமா?..

Report
230Shares

சீனாவின் ஃபுஜியான் பிராந்தியத்தில் உள்ள ஊபிங் என்ற இடத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவை தற்செயலாக ஒரு சிசிடிவி கேமரா படம் பிடித்துள்ளது. அந்த கேமரா படம் பிடித்த வீடியோ தற்போது ஆன்லைனில் வெளியாகி படுவைரலாக பரவி வருகிறது.

வீடியோவில் இடது புறத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்படுவது தெரிகிறது. இதைத் தொடர்ந்து கடல் அலை போல வரும் மணல், சாலையில் இருக்கும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்கிறது. ஊபிங்கில் இருக்கும் சியாங்ஷெங் சாலையில்தான் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து உள்ளூர் அவசரகால சேவை அமைப்புகள் உடனடியாக நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனராம். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தினால் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லையாம்.

7778 total views