ஆபாச நடனமாட சென்ற 23 வயது பெண்ணுக்கு 63 வயது நபருடன் காதல்.. வெளியான ஆச்சர்யமான தகவல்..!

Report
854Shares

23 வயது இளம்பெண்ணிடம் 63 வயது மில்லியனர் காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போர்த்துகீசிய நாட்டில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மிகவும் பிரபலமானவர் 23 வயதான மார்கரெட் ஆராணா என்பவரே இவ்வாறு காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் கேளிக்கை விடுதி ஒன்றில் ஆபாச நடனமாட சென்றிருந்துள்ளார். அங்கு தான் மார்கரெட் ஆராணாவை, விடுதியின் இணை உரிமையாளர் மிலோஸ் கான்ட் (63) முதன்முறையாக சந்தித்துள்ளார்.

ஏப்ரல் 15ம் திகதி இருவரும் டேட்டிங் செல்வதாக அறிவித்திருந்தனர். 6 வார டேட்டிங் முடிந்த நிலையில், மார்கரெட் ஆராணா மீது மில்லியனர் மிலோஸ் கான்டிற்கு காதல் மலர்ந்துள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மார்கரெட் ஆராணாவிடம், முழங்காலிட்டு மோதிரத்தை நீட்டியபடியே மிலோஸ் கான்ட் தன்னுடைய காதலை கூறியுள்ளார்.

இதனை பார்த்ததும் மிகுந்த ஆனந்தத்தில் மார்கரெட் ஆராணா, உடனே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டு கட்டியணைத்துள்ளார்.

மேலும் மார்கரெட் ஆராணாவின் வீட்டிற்கு சென்ற மிலோஸ் கான்ட் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.ஆனால் திருமணம் எப்பொழுது என்பது குறித்து தகவலை இன்னும் அறிவிக்கவில்லை.

25845 total views