இனி ஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை தண்டனை சட்டம்.. எங்கு தெரியுமா?..
சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை உறுதி..
இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சில நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில் ,ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு சில நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால், சுவாசிலாந்தில் இந்த அறிவிப்பின் தாக்கம் பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சமூக வலைதளத்தில் எழுப்பப்படும் கருத்துகளுக்கு அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
#Swaziland Dear Lord can I please just wake up in Swaziland. Is it too much to ask? pic.twitter.com/sN7nP1xAtj
— Bongani (@bongz_made_man) May 14, 2019
அதுபோன்ற ஒரு அறிவிப்பை தான் வெளியிடவில்லை என்று அந்நாட்டின் அரசர் மஸ்வாதி கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரிலும் தகவல் வெளியிட்டுள்ளார். சுவாசிலாந்து நாட்டில் உள்ள ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.