எரிமலை வெடித்த சில நொடிகளில் ஆயிரம் பேர் மரணிக்க முடியும்! கனடா நாட்டில் இப்படி ஒரு விசித்திரமா?

Report
140Shares

எரிமலை வெடித்த சில நொடிகளில் ஆயிரம் பேர் மரணிக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? எரிமலை குழம்பு மட்டும் தான் அதற்கான காரணமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

அமேசான் மழைக்காடுகளில் மனிதனின் காலடி படாத பகுதிகள் இன்னமும் இருக்கின்றன. உலகிலேயே மிக வேகமாக அழிய போகும் இனமான நாம், இந்த உலகை பற்றி அறிந்துக் கொள்ளாத ஏராளமான உண்மைகள் இருக்கின்றன.

அவற்றில் சிலவன...

கனடா!

உலகின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், கனடாவில் இருக்கும் புவியீர்ப்பு சக்தி குறைவானது என அறியப்படுகிறது. இந்த வித்தியாசமான நிகழ்வை 1960ல் தான் கண்டுபிடித்தனர்.

நெருப்பு பாறை!

பூமியின் அடியில் ஒரு நெருப்பு நீர் பாறை இருக்கிறது. அதை அடர் குழம்பு (மாக்மா - Magma) என கூறுவார். எரிமலை வெடிக்கும் அது தான் எரிமலை குழம்பாக வெளிவருகிறது.

1986ல் கேமரூனில் நடந்த ஒரு எரிமலை வெடிப்பின் போது, அதிலிருந்து வெளியான CO2 புகையால் ஓரிரு நிமிடத்தில் 1746 பேர் பலியாகினர்.

அமேசான் மழைக்காடு உலகிலே அடர்த்தியானவை. அதில் பெரும் பகுதிகள் இன்னும் அச்சத்தின் காரணமாக ஆராயப்படாமல் இருக்கின்றன. அமேசான் மழைக்காடு 25 இலட்சத்திற்கும் மேலான பல வகை உயிரினங்கள், பூச்சி வகைகளுக்கு தாய் மடியாகும்.

-133 டிகிரி!

உலகில் மிகவும் குளிரான பகுதி அண்டார்டிகாவில் இருக்கும் ஹை ரிட்ஜ் எனும் பகுதியாகும். இப்பகுதியின் வெட்பநிலை 133 டிகிரி ஃபாரன்ஹீட் , அதாவது -93.2 டிகிரி செல்சியஸ்.

சுனாமி!

சுனாமி வரப்போகிறது என்பதை நாம் அறிய ஒரு வழி இருக்கிறது. சுனாமி வருவதற்கு முன், அந்த கடற்கரையில் திடீரென நீர் சில மீட்டர்கள் உள்வாங்கும். இதை வைத்து அங்கே சுனாமி வரப் போகிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

6561 total views