உடற்பயிற்சி செய்யும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்துகொண்ட நபர்.. வைரலான காணொளியால் பரபரப்பு..!

Report
1552Shares

உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்ணை பார்த்து அருவெறுப்பாக நடந்து கொண்ட ஆணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

பொது இடங்களில் பெண்களை பார்த்து மோசமாக சிலர் தவறாக நடந்துகொள்வது பார்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் ஒரு செயல் ஆகும். மேலும் இதை பொது இடங்களில் பின்பற்றுதல் மோசமான விஷயமாகாவே பார்க்கப்படுகிறது.

அத்தகைய நிகழ்வு ஒன்று தான் தற்போது தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது. பிரபல உடற்பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்ணை பார்த்து இளைஞர் ஒருவர் அருவெறுப்பாக செயல்படுகிறார்.. இந்த நிகழ்வினை அருகில் இருக்கும் மற்றொரு நபர் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பரப்பி விடுகின்றார்.

ஸ்டெல்லன்போச் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ள நபர்., இச்செயலில் ஈடுபடும் இளைஞரின் முகம் உலகம் முழுக்க பரவ வேண்டும் என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இச்சம்பவத்தினை அடுத்து குறிப்பிட்ட இந்த இளைஞரின் உடற்பயிற்சி கூட உரிமையினை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

63488 total views