மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய நாய்..!

Report
768Shares

தாய்லாந்தில் நாய் ஒன்று உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பேன் நாங் என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதை தனது பெற்றோர்களிடமிருந்து மறைப்பதற்காக குறித்த இளம்பெண் சிறிதும் இரக்கமின்றி பச்சிளம் குழந்தையை குழி தோண்டி புதைத்துவிட்டார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உசா நிசாய்கா என்பவரது நாய் பிங்பாங் குரைத்துக் கொண்டே மண்னை தோண்டியுள்ளது.

இதை கவனித்த அந்த நாயின் உரிமையாளர் குழந்தையின் கால் ஒன்று மண்ணில் தெரிவதை கவனித்துள்ளார்.

உடனே உள்ளூர்வாசிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சுத்தம் செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த குழந்தையின் தாய் மீது, பச்சிளம் குழந்தையை கைவிடல் மற்றும் கொலை செய்ய முயற்சி செய்தல் ஆகிய குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

அவர் தற்போது அவரது பெற்றோர்களின் கவனிப்பிலும், மனநல ஆலோசனைகளை பெற்று வருகிறார் என காவல்துறை அதிகாரி ஒருவர் பாங்காங் போஸ்ட் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

மேலும் தனது செயல்களுக்காக அந்த தாய் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் பெற்றோர் குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

24194 total views