உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…!

Report
1826Shares

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்குள் குவிந்த வருகின்றன. இது குறித்து நோபாள ஊடகங்கள் பெருமையாக தகவல் வெளியிட்டுள்ளன.

அச்சில் பதித்தால் கூட எவ்வளவு அழகாக எழுதுவது என்பது சாதாரண மனிதர்களினால் முடியாத காரியம் ஆகும்.அச்சில் கோர்த்து பதித்தது போல குறித்த மாணவி தனது பாடக் குறிப்புகளை எழுதியுள்ளார். இவ்வாறு அவர் எழுதிய எழுத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ப்ரக்கர்ரி மல்லா எனும் பெயர் கொண்ட தரம் எட்டில் கல்வி கற்கும் இந்த சிறுமி பார்ப்போர் அனைவரையும் தனது எழுத்துக்களினால் வென்று விடுகிறாள்…. கடவுளுக்கே உரித்தான நாமம் கொண்ட இந்தச் சிறுமிக்கு, இவளது மிகச் சிறந்த எழுத்துப் புலமையைப் பாராட்டி அந்நாட்டு அரசு கௌரவ பாராட்டுப்பத்திரமொன்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

59279 total views