திருடனின் கழுத்தில் பாம்பை சுற்றி சித்ரவதை செய்த பொலிசார்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

Report
332Shares

இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் பொலிசார் திருட்டு வழக்கில் கைதான ஒருவரை வித்தியாசமாக விசாரணை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

செல்போன் திருட்டு வழக்கில் கைதான ஒருவரின் கழுத்தில் பாம்பை சுற்றி, பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் பாம்பை, கழுத்தில் சுற்றி அவரை பயமுறுத்தும் வகையில் விசாரணை செய்துள்ளனர்.

மேலும் பாம்பை கழுத்தில் சுற்றியதால் பயந்துபோன அவர், 2 முறை செல்போன் திருடியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நடவடிக்கையை பலரும் கண்டித்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு ஜெயவிஜயா தலைமை காவல் அதிகாரி டோனி ஆனந்த ஸ்வாதயா மன்னிப்பு கோரியுள்ளார்.

விசாரணை செய்தவர்கள் சரியான முறையை பின்பற்றவில்லை. அவர்கள் பயன்படுத்திய பாம்பு விஷமற்றது. குற்றவாளியின் உடலில் காயம் ஏதும் ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று டோனி ஆனந்த ஸ்வாதயா தெரிவித்துள்ளார்.

10055 total views