எஜமானருக்காக உயிரைக் கொடுத்த செல்ல நாய்..! கண்கலங்க வைத்த சம்பவம்

Report
622Shares

நாய்கள் எப்போதும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான செல்லப்பிராணி.

தனக்கு ஒரு மடங்கு நன்மை செய்தால், திருப்பி அவர்களுக்காக உயிரையே கொடுக்குமளவிற்கு மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கும்.

அப்படித் தான் ஒரு சம்பவம் மலேசியாவில் உள்ள Sarawak பகுதியில் நிக்ழ்ந்துள்ளது.

அதாவது, பாம்பிடமிருந்து தனது எஜமானரின் குடும்பத்தை காப்பதற்காக உயிரைக் கொடுத்துள்ளது அந்த செல்லபிராணி நாய்.

உரிமையாலர் நாயை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக அழைத்தும் வராததால் நாயின் அருகில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, நாயின் உடலை மலைப்பாம்பு ஒன்று இறுகச் சுற்றியிருந்ததைப் பார்த்துள்ளார்.

இதனால், பதறிப்போன, உரிமையாளர் பாம்பை அடித்ததில் மிரண்டுபோன பாம்பு அருகிலிருந்த குழிக்குள் சென்று மறைந்துள்ளது.

பின்பு, தீயணைப்பு வீரர்கள் வந்து வீட்டிலிருந்து பாம்பை அகற்றினர். 6 மீட்டர் நீளமுள்ள பாம்பைப் பிடிக்க சுமார் 1 மணிநேரம் ஆனது.

நாய் பாம்புடன் போராடியதால் பாம்பு வீட்டினுள் நுழையவில்லை என்றார் செல்ல நாயை இழந்த உரிமையாளர். தாங்கள் உயிருடன் இருப்பதற்குக் காரணம் எங்கள் குழந்தையாகிய அந்த நாய் தான் என்றனர் குடும்பத்தார்.

26681 total views