மார்பக புற்றுநோயில் இருந்து உயிர்தப்பிய 3 வயது சிறுமி

Report
58Shares

சீனாவை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்!சீனாவை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்!

நோய் என்பதற்கு இளம்பெண், சிறுமி, முதிவர் என்ற பாகுபாடு இல்லை. அந்த வகையான நோய்களில் ஒன்று தான மார்பக புற்றுநோய்.

சீனாவை சேர்ந்த 3 வயது சிறுமி யான் யான். கடந்த மார்ச் மாதம் இவரது மேல் சட்டையில் ரத்த கரை படிந்திருப்பதை கண்டு அதிர்சியடைந்த அவரது தாயார் மருத்துவமனைக்கு யான் யானை ஆழைத்துச்சென்றார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பாலுறுப்பு வளர்சி, பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஒரு விசயம் தான் என அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.

எனினும் தன் மனம் கேளாமல் மற்றொரு மருத்துமனையினை யான் யான் தாயார் நாடியுள்ளார். அங்கு யான் யானை பறிசோதித்த ஜிகான்சு மக்கள் மருத்துமனை மருதுவர்கள் யான் யான் secretory breast carcinoma எனப்படும் மறைமுக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை புற்றுநோயினை சரி செய்வது என்பது கடிணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் தொட்டு உணரும் போது புற்றுநோய் கட்டி நகரும் தன்மை கொண்டது என்பதால் புற்றுநோய் கட்டியினை கண்டறிந்து அகற்றுவது என்பது சற்றி கடிணமான காரியம். யான் யானை பாதித்த இந்நோய் ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டது என்பதால் அறுவைசிகிச்சைக்கான நேரத்தினை எட்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அறுவைசிகிச்சைக்கான தேதியினை குறித்த மருத்துவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் இவ்வகை புற்றுநோய் கட்டிகளை எவ்வாறு அகற்றுவது என ஹார்ட்வேர்ட் மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் தாங் ஜின் ஹாய் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதியாக அறுவைசிகிச்சைக்கான நாள் வந்தபோது., மருத்துவர்கள் நிபுனரின் உதவியுடன் வெற்றிகரமாக சிறுமியின் புற்றநோய் கட்டியினை அகற்றியுள்ளனர்.

3 வயதில் மார்பக புற்றுநோய் பெற்று, அதனை வெற்றிகரமாக வென்று உயிர்தப்பியுள்ள யான் யான், உலகின் மிக குறைந்த வயது மார்பக புற்றுநோய் போராளி என்பது குறிப்பிடத்தக்கது.

யான் யானின் புற்றநோய் குறித்து அவரது தாயார் தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்த காரணத்தால் தற்போது யான் யான் நலமாக உயிர்வாழ்ந்து வருகின்றார்.

2657 total views