அந்தரத்தில் பறந்தாலும் நான் தான் கெத்து: மாஸ் காட்டிய உசைன் போல்ட்! வீடியோ

Report
61Shares

உலகின் மிக வேகமான மனிதர் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்கா தடகள நாயகன் உசைன் போல்ட். இவரை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அந்தளவிற்கு 100 மீ., 200 மீ. ஓட்டப்பந்தயங்களில் வென்று பதக்கங்களை வாங்கி புகழ் பெற்றுள்ளார்.

மொத்தமாக ஒலிம்பிக்கில் மட்டும் உசைன் போல்ட் 9 பதக்கங்களை வென்றுள்ளார்.

இவா் நேற்று பிரான்சில் ஏர்பஸ் எ310 ரக ஜீலோ கிராவிட்டி விமானத்தில் பயணம் செய்தார். இந்த விமானமானது கிராவிட்டி இல்லாதது போன்ற செயற்கை சூழலை உண்டாக்கவல்லது. இது உண்மையாக விண்வெளியில் இருப்பதை போன்ற ஜீரோ கிராவிட்டி கிடையாது.

ஆனால் கிராவிட்டி மிகக் குறைந்த அளிவில் தான் இருக்கும். இதில் மகிழ்ச்சியாக பயணம் செய்த உசேன் போல்ட், அங்கிருந்தவா்கள் விளையாட்டாக விடுத்த சவாலை ஏற்று ஜீலோ கிராவிட்டியில் ஒரு சிறிய ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்றார். இந்த பந்தயத்திலும் போல்ட் வெற்றி பெற்று நான் தான் சாம்பியன் என்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் இதனை போல்ட் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

2798 total views