தனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி

Report
104Shares

கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் தோனியின் மகள் மைதானத்தில் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி தனது மகள் ஜிவாவை பற்றிய சில நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் “ஒரு கிரிக்கெட் வீரராக ஆரம்பித்த எனது வாழ்க்கை தந்தை என்ற நிலையை அடையும் வரை எந்தவிதமான வித்யாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஜிவா எதிர்பாராதவிதமாக என்னை மாற்றிக்கொண்டு வருகிறாள். அவள் எனது முதுகெலும்பாக இருக்கிறாள் என்பதை நான் உணர்கிறேன்”. கிரிக்கெட் வீரராகவோ அல்லது ஒரு மனிதராகவோ நான் மாற்றியுள்ளேனா என்பது தெரியவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் அவரது அப்பாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அவர்களுக்காக நான் நேரத்தை ஒதுக்குவதில்லை என்பது தான். ஜிவா பிறக்கும் போது நான் அருகில் இல்லை, அப்போது நான் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இருந்தேன். அப்போது எனக்கு எல்லாமே மோசமாக இருந்தது. சில நேரங்களில் அவளை சமாளிப்பது கடினமான ஒன்று.”கானா நஹி கா ரஹி ஹை, பாப்பா ஆயேங்கி கானா காவோ( அவள் உணவு சாபிடாமல், நான் வரும் வரை காத்திருப்பாள்), பாப்பா ஆ ஜேயேங்கி மத் கரோ” என்றெல்லாம் கூறும்போது ஜிவா என்னை தவறவிடுவதை உணர்கிறேன். அவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக ஜிவா எனது முதுகெலும்பாக மாறி வருகிறாள் என்று தோனி உணர்வுப்பூர்வமாக கூறினார்.

கடந்த மாதம் முடிந்த ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஜிவா பங்கேற்றாள். போட்டியின் போது அவள் இருந்தது அற்புதமான தருணங்கள். அப்போது மைதானத்திற்கு போக வேண்டும், அங்குள்ள புல்வெளிகளில் விளையாட வேண்டுமென்பது ஜிவாவின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் மற்ற வீரர்களின் குழந்தைகளும் அங்கு இருந்தனர்.

நான் பிற்பகல் 1.30 அல்லது 3 மணியளவில் எழுந்திருப்பேன். ஜிவா காலையில் 8.30 மணிக்கு எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்று விடுவாள். என்று ஜிவாவின் அழகிய தருணங்களை தோனி பகிர்ந்து கொண்டார்.

ஜிவா எந்தளவிற்கு கிரிக்கெட்டை புரிந்து வைத்துள்ளார், அதனை பின்பற்றுகிறாள் என்று தெரிய வில்லை. ஆனால் ஒரு நாள் நான் விளையாடும் போட்டிக்கு அவளை அழைத்து வருவேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் அவள் பதிலளிப்பாள் என்றும் தோனி அமைதியுடன் கூறினார்.

4708 total views