காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடுகளுக்கு திருமணம்

Report
56Shares

கர்நாடகா மாநிலத்தில் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, கர்நாடகா ரக்ஷன வேதிக் அமைப்பினர் செம்மறி ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடுகளுக்கு திருமணம்காதலர் தினம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும், சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து கர்நாடக ரக்ஷன அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் வட்டல் நாகராஜ் என்பவர் கூறுகையில், காதல் என்பது மதம், இனம் கடந்தது என்றும், தற்போது ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்ததும் கூட காதலின் புனிதத்தை காட்டுவதற்காகவே என்றும் தெரிவித்தார்.

மேலும், காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், மத்திய அரசு ஒரு நாள் விவடுமுறை அளிக்க வேண்டும் என்றும் காதல் திருமணம் செய்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் மாநில அரசு நிதி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

2947 total views