செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ விருது

Report
161Shares

செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரித்தானிய புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் என்பவர் குரங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக காட்டில் பொருத்தி வைத்திருந்த கமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த ‘நருடோ’ என்ற குரங்கு அழுத்தியதில் அந்த குரங்கின் புகைப்படம் பதிவாகியிருந்தது.

இது குரங்கு எடுத்த செல்பி இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், குரங்கு எடுத்த செல்பி இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை பெற்றுள்ளது.

இதற்கான அறிவிப்பை பீட்டா எனப்படும் விலங்குகள் உரிமை குழுமம் வெளியிட்டுள்ளது.

குரங்கானது உயிருள்ள ஒரு விலங்காகும். அதனை மதித்து விருது வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பொருளுக்கு, மனிதர் அல்லாத உயிரினத்தை, உரிமையாளராக அறிவிக்கக் கோரி இந்த புகைப்படத்தின் காப்புரிமையை செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு வழங்க வேண்டும் என பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.

இறுதியில், அந்த புகைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ என்ற குரங்கினத்தை பாதுகாக்க நன்கொடையாக வழங்குவதாக டேவிட் ஸ்லேட்டர் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

5801 total views