இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்: அதன் தீர்வுகளும்

Report
124Shares

இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் பெண்களுக்கும் ஏற்படும். மேலும் பருவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அதிக அவஸ்தையும் ஏற்படலாம்.

பெண்கள் வீட்டு வேலைகளை செய்கிறார்கள். மாத விலக்கு, கர்ப்பம், பிரசவம், போன்றவைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

கர்ப்பத்தின் போது 12 கிலோ வரை பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. அந்த எடை முதுகுப்பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டு, பிரசவத்திற்கு பிறகு இயல்புக்கு வருகிறது.

அதிக நேரம் இருசக்கரம் ஓட்டும் பெண்களுக்கு இவ்வாறான வலி தவிர்க்க முடியாமலாகிவிடுகிறது.

ஐம்பது வயதை தொடும் மோனோபாஸ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடுவதால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து ‘ஆஸ்டியோபொராசிஸ்’ தோன்றும். அதுவும் வலியை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

அதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள், அது தொடர்பான வலிகள் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

வலி நீக்கும் தீர்வுகள் :

எலும்புகளை பலப்படுத்த தினமும் 15 நிமிடங்கள் உடலில் வெயில்படும்படி நடக்க வேண்டும். வெயில் கொண்டால்தான் வைட்டமின்-டி மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் ‘டெபாசிட்’ ஆகும். கால்சியம் உடல்பலத்திற்கு மிக அவசியம்.

எலும்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் நேரடி ஆலோசனையை பெற வேண்டும். ஏன் என்றால் சில பாதிப்புகளை தொடக்கத்திலே உங்கள் டாக்டரால் மாத்திரைகள் மூலமாகவே சரிசெய்திட முடியும். சிலருக்கு பிசியோதெரபி தேவைப்படும்.

எனவே இவ்வாறான வலிகளை அரம்பகாலத்திலேயே பார்த்து சிகச்சை பெறுவது நல்லது.

4663 total views