சென்னையில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி..!

Report
120Shares

வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்

சென்னைக்கு வடகிழக்கே வங்கக் கடலில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக சென்னையில் காலை 7.02 மணியளவில் வீடுகள், கட்டடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதை இரவில் உணர்ந்ததாக பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் தி,நகர், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர். இதனால், எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. கடலில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்படும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் எதும் தெரிவிக்கவில்லை.

4730 total views