நடுரோட்டில் இரக்கமின்றி கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்... கொரோனாவிற்கு மத்தியில் போராட்டக்களமாக மாறிய அமெரிக்கா!

Report
1351Shares

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

அந்தக் காணொளியில் பொலிஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட்(46). அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறி கதறியது மக்கள் மத்தியில் படும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. அங்கு முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் வெடித்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி உள்ளது. முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்து இருக்கிறது. வாஷிங்டன் டிசி, நியூயார்க், கலிபோர்னியா, மின்னெசோட்டா ஆகிய பல மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது அங்கு வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகம் நோக்கி மக்கள் திரளாக சென்றனர் . ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் எல்லோரும் அங்கு வெள்ளை மாளிகையை முற்றுகையிட குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த போராட்டம் காரணமாக தற்போது அதிபர் டிரம்ப் அங்கு வெள்ளை மாளிகை உள்ளே பதுங்கி உள்ளார். அங்கிருக்கும் பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார்.

இதனால் அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டம் கைமீறி போய் உள்ளது. இப்படியே போனால் மக்கள் அங்கு வெள்ளை மாளிகையை கைப்பற்ற கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தற்போது அங்கு மீண்டும் யுத்தம் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளையர்களுக்கு இடையிலான போராட்டமாக இது உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு போராக மாறலாம். அல்லது அமெரிக்காவில் புதிய புரட்சி வெடிக்க இது வாய்ப்பாக அமையும் என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவில் இன்னும் நிலைமை மோசம் அடையும் என்கிறார்கள்.

loading...