ஒரே நாளில் வலியால் துடிதுடித்து இறந்து போன பெண்! உடலை எரித்தபோது கூட யாருமே பக்கத்தில் இல்லை.. கதறும் அண்ணன்

Report
2003Shares

மத்திய அமெரிக்காவின் எல் சால்வடார் பகுதியை சேர்ந்த ஜெஸிகா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்தநாளே பரிதாபமாக கொரோனாவல் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரும் இவரது அண்ணாவும் கடந்த 3 வருடங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 23ஆம் திகதி "உடம்பெல்லாம் வலி.. நடுக்கமா இருக்கு.."என்று அண்ணாவிடம் கூறியுள்ளார். கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் இது எதுவுமே அவருக்கு காணப்படவில்லை.

இது குறித்து ஜெசிக்காவின் அண்ணன் கண்ணீருடன் கூறியது,

மருத்துவமனை செல்வதாக ஜெஸிகா சொன்னபோது, முதலில் போய் டெஸ்ட்-களை எடுக்க சொல்லி கூறினேன். மறுநாள் பிணமாகத்தான் தங்கையை கண்டேன்.

"மார்ச் 23-ம் திகதி வரைக்கும் ஜெஸிகாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்தார். லேசாக உடம்பு வலி, குளிர்ச்சி, நடுக்கம் இருப்பதாக சொன்னார்.

ஆனால் எங்களுக்கு ஒரு டவுட் இருந்தது. உடம்பு வலிதானே, அதற்கும் வைரஸுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்து முதலுதவி மருந்து தந்தேன். ஆனால் மறுநாளே உடல்நிலை மோசமாக இருப்பதாக போன் வந்தது. மருத்துவமனைக்கு நான் நுழைந்ததுமே ஏற்கெனவே ஜெஸிகா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

ஒரேநாளில் உடல்நிலை மோசமாகி உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. எல்லாமே முடிஞ்சு போச்சு.

எவ்வளவு வலியில் அந்த ஒருநாள் என் தங்கை துடித்திருப்பாள். கதறி இருப்பாள்.. அந்த நேரத்தில் ஆறுதல் சொல்லக்கூட நான் அவள் பக்கத்தில் இல்லையே.. அவளுடைய உடம்பை எரித்தபோதுகூட குடும்பத்தினர் யாருமே வர முடியாத சூழல்.. இந்த மாதிரி நிலைமை யாருக்குமே வரக்கூடாது" என்றார்.

எந்த சிகிச்சையும் எடுக்கும் முன்னரே அறிகுறி தெரிந்த அடுத்தநாளே ஜெஸிகா உலகைவிட்டு போனதை நினைத்து குடும்பத்தினர் இன்னும் மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.

loading...