லாக்டவுனுக்கு முன் வாடிக்கையாளர் கொடுத்துச் சென்ற இன்ப அதிர்ச்சி.. தீவிரமாக தேடும் ஹொட்டல் உரிமையாளர்!

Report
631Shares

அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலால் ஹொட்டல்கள் மூடப்படுவதற்கு முன் வாடிக்கையாளர் ஒருவர் 10 ஆயிரம் டொலர்களை டிப்ஸாக வைத்து விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ள அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் அங்கு நேற்று மட்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளான நிலையில், 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அனைத்து உணவகங்களும் மூடப்பட்டு, ஒரு சில ஹொட்டல்களில் பார்சல் வசதி மட்டும் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஹொட்டல்கள் மூடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டொலர்களை டிப்ஸாக வைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள ஹொட்டல் உரிமையாளர் ரோஸ் எட்லண்ட், “இந்த உலகில் உண்மையான, அற்புதமான மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த வாடிக்கையாளர் அளித்த 10 ஆயிரம் டொலர்களும் 200 ஊழியர்களுக்கு தலா 500 டொலர்கள் என சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாடிக்கையாளர் யார் எனத் தெரியாத நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

loading...