வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..!

Report
388Shares

வீட்டில் பொருத்தப்பட்ட கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் மர்ம நபர் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லி லிமே என்பவர் இரவு பணிக்கு செல்வதால் தன்னுடைய 8 வயதுடைய மகளை பார்த்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் மகளின் அறையில் பிரத்யேக கேமராவை பொருத்தினார். இந்த கேமரா மூலம் மகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், அந்த கேமராவுடன் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மூலம் தகவல்களையும் பரிமாறலாம்.

இந்த நிலையில் யாரோ ஒரு மர்ம நபர் கேமரா வழியாக பேசுயுள்ளார். இதனை மகள் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளார்.

அதில், மர்ம நபர் ஒருவர் நான் சாண்டா லாஸ். நான் உன்னுடைய நண்பன் என சொல்ல சிறுமி யார் நீ என திரும்பி கேட்கிறாள். அதற்கு நான் சாண்டா லாஸ். நீ என் தோழியாக இருக்க விருப்பமில்லையா என மீண்டும் அந்த மர்ம குரல் பேசுயுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷ்லி அறையில் பொருத்திய கேமராவை நீக்கியுள்ளார். அதன் பின் பேசிய அவர், 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் அந்த அறையில் நடப்பதை நிச்சயம் கேமரா வழியாக கண்காணித்து இருப்பார்கள். மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த தகவலை தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்த கேமரா நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.