ஒட்டு மொத்த இணையவாசிகளையும் அதிர வைத்துள்ள வீராங்கனை.. குவிந்து வரும் பாராட்டுக்கள்..!

Report
193Shares

அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் இன்றைய தினத்தில் ஒட்டு மொத்த இணையவாசிகளை தலைசுற்ற வைத்துள்ளார். நேற்று முதல் வைரலாகும் அவரின் ஜிம்னாஸ்டிக் வீடியோவை பார்த்த அனைவரின் ரியாக்‌ஷனும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

யார் இந்த சிமோன் பைல்ஸ்?

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் சாம்பியனான சிமோன் பைல்ஸ் புகழின் உச்சிக்கே சென்ற வீராங்கனை ஆவர். 22 வயதில் இவர் அடைந்திருக்கும் இடம், பெற்றிருக்கும் பட்டங்கள், உரிதாக்கி இருக்கும் விருதுகள் மற்ற வீராங்கனைகளுக்கும் பொறாமை வர வைக்கும்.

இவரின் ஜிம்னாஸ்டிக் கலை எல்லோரையும் வாவ் சொல்ல வைக்கும். ஒலிம்பிம் போட்டிகளில் இதுவரை இவர் தங்கம் வெல்லாமல் நாடு திரும்பியது இல்லை. ஒரே ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற 5வது வீராங்கனை என சிறப்பு பட்டத்தையும் சிமோன் பைல்ஸ் சொந்தமாக்கியுள்ளார்.

சிமோன் பைல்ஸ் ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. 1 முறை அல்ல 3 முறை வானத்திலேயே சுழன்று சிமோன் பைல்ஸ் காட்டிய மாய வித்தை கண்களை விட்டு நீங்கவே இல்லை.

இந்த காட்சியை நேரடியாக பார்த்த ரசிகர்கள் உட்பட ஒட்டு மொத்த அரங்கமும் ஆச்சரியத்தில் கைகளை பலமாக தட்டினர். சிறிது நேரத்தில் வெளியான வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்பு கூகுளில் அதிகப்படியானோர் சிமோன் பைல்ஸ் குறித்து தேடலில் ஈடுப்பட்டனர்.

6816 total views