சுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்!... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி?

Report
1983Shares

ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது என்பது சாமானியப்பட்ட விஷயம் கிடையாது. ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து மாற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர்கள் தான். வெறுமனே கல்வி சொல்லிக் கொடுப்பதும் நல்ல குணநலன்களை சொல்லிக் கொடுப்பதும் மட்டும் ஒரு பெற்றோரின் கடமை இல்லை.

வளர்ச்சி பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் இந்த டீன் ஏஜ் பருவம் என்பது பெரும் மாற்றத்தை கொடுக்க கூடிய பருவம். உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் அதற்கு அவர்கள் தயாராக வேண்டும். ஆனால் நிறைய பெற்றோர்கள் இதை புரிந்த பாடில்லை. அந்தவகையில் ஒரு பெற்றோர் தன் மகனின் சுய இன்ப செயலை தடுக்க என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.

சமூகவலைதளம்

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பெற்றோர்கள் தன்னிடம் நடந்து கொண்ட நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் அதை வெளியிட்டுள்ளான். தான் சுயஇன்பம் காண்பதை என் அறைக்கு அனுமதியின்றி உள்ளே நுழைந்த தந்தை அவதானித்துவிட்டார்.

அவதானித்தது மட்டுமின்றி பயங்கரமான சத்தம் போட்டதால் நான் ஒளிந்துகொண்டேன். தற்போது நான் சுய இன்பம் காண்பதை தடுக்க என் பெற்றோர்கள் என் அறையிலும் நான் பயன்படுத்தும் குளியலறையிலும் கேமராக்களை பொருத்தி உள்ளார்கள் என்றும் கூறியுள்ளான்.

தினசரி கண்காணிப்பு

பொருத்தியதோடு மட்டுமல்லாமல் தினசரி அந்த கேமராக்களை கண்காணிப்பு செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். தினமும் உன் நடவடிக்கைகளை மானிட்டர் செய்து கொண்டே இருப்போம். சுய இன்பம் காண்பது தவறு, இனி அப்படி செய்தால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று அவனை பயமுறுத்தி உள்ளார்கள்.

தகுந்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சி பிறகு போலிசாரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பையனுக்கு செக்ஸ் கல்வி குறித்து சொல்லிக் கொடுக்கவும், டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் அவரின் பெற்றோர்க்கும் டீன் ஏஜ் பருவம் பற்றிய புரிதலை எடுத்துக் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

செக்ஸ் கல்வி

இப்பொழுது மூலை மூலைக்கு செக்ஸ் கல்வி குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புரிதல் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். பள்ளியில் செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒவ்வொரு பெற்றோர்களும் டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது ஒரு இயற்கையான மாற்றம் என்பதை புரிய வையுங்கள். அது குறித்து பயத்தை உண்டாக்காதீர்கள்.

நாம் எல்லாரும் பிறக்க காரணமாக இருந்த தாயின் உடலமைப்பை பற்றி சொல்லிக் கொடுக்க வெட்கப்பட வேண்டியதில்லை. அதே மாதிரி ஒவ்வொரு தந்தையும் டீன் ஏஜ் பருவத்தில் மகனுக்கு ஒரு நண்பனாக இருங்கள். செக்ஸ் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு அவசியம். பெண்னை புரிந்து கொண்ட ஆணும், ஆணை புரிந்து கொண்ட பெண்ணும் இருந்தால் மட்டுமே பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

loading...