ஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்!

Report
1294Shares

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி பிரிசில்லா மல்டனாதாஸ் (25) என்ற பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எல்லோரும் தனக்குக் குழந்தை பிறந்தால் மகிழ்வார்கள் ஆனால் இப்பெண் மிகவும் சோகம் ததும்பும் முகத்துடன் காணப்படுகிறார்.

ஆம்! இவருக்குப் பிறந்த குழந்தையானது துரதிஷ்ட வசமாக அவரது குழந்தையின் பிஞ்சு உடலில் மேல் தோலின்றி இக்குழந்தை பிறந்துள்ளதே இதற்குக் காரணம்.

தாய் பிரிசில்லாவுக்கு முதலில் குழந்தையைக் காட்டவில்லை. ஏன்? குழந்தை ஆணா, பெண்ணா, எத்தனை கிலோ எடை என்பது கூட இவருக்குத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பின்னர் தான் அடம்பிடித்து தன் குழந்தையைப் பார்த்துள்ளார் பிரிசில்லா.

அப்போதுதான் ஐசியூவில் தன் குழந்தைக்கு உடல் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்டுள்ளதைக் கண்டார். இதில் குழந்தைக்கு மேல் தோலில்லாமல் இருப்பதைத் தெரிந்து கொண்டு வேதனையடைந்தார்.

இதுபற்றி மருத்துவர்கள் அவரிடம் கூறியதாவது, குழந்தைக்கு மரபணு கோளாறு காரணமாக இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தைக்குத் தலையிலும் தோலில்லாததால் மண்டை ஓடும் நன்றாகவே தெரிகிறது என்றும் கூறியுள்ளனர்.

தற்போது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பெற்றோர்களான பிரிசில்லா - ஜாப்ரி கடுமையாகப் போராடி வருகின்றனர். பலரும் பாதிக்கப்பட்ட இக்குழந்தைக்கு உதவி செய்துவருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

41656 total views