வீட்டிற்குள் புகுந்து லைவ் வீடியோவில் ஆடைகளை களைத்த பெண்.. அதிர்ந்துபோன வாலிபர்..!

Report
1363Shares

அமெரிக்காவில் பெண் ஒருவர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து திடீரென லைவ் வீடியோவில் தனது ஆடைகளை கலைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடைகளை களைத்து வீடியோ

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் திடீரென வாலிபர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர், பெண்ணிடம் நீங்கள் யார் என வினாவியுள்ளார். அதற்குள் அந்த பெண், வாலிபரின் போனை பிடுங்கி, அவரின் பேஸ்புக் லைவில் தனது ஆடைகளை களைத்து அரைகுறை உடையுடன் வீடியோ எடுத்தார். வீடு முழுவதும் அரைகுறை ஆடையுடனே சுற்றி லைவ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அகிலா ஹாஸன் என்னும் அந்த பெண் வீடு ஒன்றிற்குள் நுழைந்து ஒவ்வொரு தளமாக சுற்றி வந்திருக்கிறார்.

ஒரு அறைக்குள் ஒரு ஆண் இருக்க, அவரிடமிருந்து மொபைல் போனைப் பறித்த அகிலா பேஸ்புக் லைவ் வீடியோவில், சிலரை அந்த வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி அழைத்திருக்கிறார்.

பின்பு லைவ் வீடியோவிலேயே அந்த ஆணுக்கு முன்பாகவே உடை களைந்த அகிலா, வெறும் உள்ளாடையுடனே லைவ் வீடியோவில் தொடர்ந்தவாறே வீடு முழுவதும் சுற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அகிலா, வீட்டின் பின்னாலிருந்த தோட்டத்திற்குள் நுழைந்து அங்கும் வீடியோ எடுப்பதை தொடர்ந்திருக்கிறார். ஒருவாறு சுதாரித்துக் கொண்ட அந்த ஆண், அகிலா தோட்டத்திற்குள் சென்றதும் அவளை வெளியே விட்டு கதவை சாத்தி விட்டு பொலிசாரை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் அத்து மீறி வீட்டுக்குள் நுழைந்த பெண்ணைக் கைது செய்து அவர் மீது திருட முயன்றதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குறித்த பெண் அவ்வாறு நடந்து கொண்டது ஏன் என்றும், மது அருந்தியிருந்தாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

47747 total views