உல்லாச கப்பலின் 11-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்.. காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

Report
813Shares

உல்லாச கப்பலின் 11-வது மாடியில் இருந்து பயணி ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் கடுமையாக அதிர்ச்சியடைக்கூடும்.

உல்லாச கப்பல்களில் (Cruise Ship) பயணம் செய்யும் மோகம் பொது மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பலர், உல்லாச கப்பல்களில் அவ்வப்போது பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்தவரான நிக்கோலே நைதேவும் (Nikolay Naydev) அப்படிப்பட்ட ஒருவர்தான். உல்லாச கப்பல்களில் அடிக்கடி பயணம் செய்யும் பழக்கம் நிக்கோலே நைதேவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபலமான உல்லாச கப்பல்

இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராயல் கரீபியன் உல்லாச கப்பலில், நிக்கோலே நைதேவ் பயணம் செய்து கொண்டிருந்தார். ராயல் கரீபியன் (Royal Caribbean) என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உல்லாச கப்பல்களில் ஒன்றாகும்.

கரீபியன் பகுதியில் உள்ள பஹாமஸ் (Bahamas) நாட்டின் தலைநகர் நசாயு (Nassau) எனும் நகரை ஒட்டியுள்ள கடலில், ராயல் கரீபியன் உல்லாச கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது நிக்கோலே நைதேவ் திடீரென கப்பலின் 11வது தளத்திற்கு சென்றார்.

பின்னர் 11வது மாடியில் இருந்து நிக்கோலே நைதேவ் திடீரென கடலில் குதித்தார். அங்கிருந்த அனைவரும் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எழுப்பிய அபாய குரல் காரணமாக கப்பலின் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

நிக்கோலே நைதேவ் கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு அவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். பின்னர் நிக்கோலே நைதேவை மீட்பதற்காக, சிறிய அளவிலான படகு ஒன்றை அவர்கள் உடனடியாக அனுப்பி வைத்தனர். அந்த சிறிய படகு விரைந்து சென்று நிக்கோலே நைதேவை மீட்டது.

அதிர்ஷ்டவசமாக நிக்கோலே நைதேவ் உயிர் தப்பி விட்டார். என்றாலும் அவரது கழுத்து மற்றும் முதுகு தண்டு வடத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எனவே கப்பலில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக நிக்கோலே நைதேவுக்கு சிகிச்சை அளித்தனர்.

குடித்துவிட்டு கடலில் குதிக்க முடிவு

இதன்பின் 11வது மாடியில் இருந்து திடீரென கடலில் குதித்தது ஏன்? என்பது தொடர்பாக நிக்கோலே நைதேவிடம், கப்பல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமான இருந்தது.

சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு நிக்கோலே நைதேவ் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். பின்னர் காலை எழுந்தவுடன், கடலில் குதிப்பது என அவர் முடிவு செய்தார். இதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலை தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதே அவரது திட்டம்.

மிகவும் வித்தியாசமான ஏதேனும் ஒன்றை செய்து, அதனை வீடியோவாக எடுத்து, பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பகிரும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட வீடியோக்கள் வைரலாக பரவுவதால், சம்பந்தப்பட்ட நபர் வெகு வேகமாக பிரபலம் அடைந்து விடுகிறார். இப்படி சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகதான் உயிரை பணயம் வைத்து, கப்பலின் 11வது மாடியில் இருந்து நிக்கோலே நைதேவ் கடலில் குதித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றபோது நிக்கோலே நைதேவின் நண்பர்களும் அவருடன் இருந்துள்ளார். துணிச்சலாக கடலில் குதிக்கும்படி அவர்கள் தங்கள் பங்கிற்கு நிக்கோலே நைதேவை ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால்தான் அவரும் கடலில் குதித்துள்ளார்.

தான் கடலில் குதித்த வீடியோவை நிக்கோலே நைதேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், அவரது நண்பர்கள் அவரை ஊக்குவிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தற்போது உலகம் முழுக்க வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்களே பார்க்கலாம்.

View this post on Instagram

Full send. (Check out my channel, link in bio)

A post shared by Nick Naydev (@naydev91) on

இந்த வீடியோ வைரலான சூழலில், நிக்கோலே நைதேவ் இனி தங்கள் உல்லாச கப்பலில் பயணம் செய்ய ராயல் கரீபியன் நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே இனி வாழ்நாளில் ஒரு முறை கூட நிக்கோலே நைதேவ், ராயல் கரீபியன் உல்லாச கப்பலில் பயணம் செய்ய முடியாது.

இதுகுறித்து ராயல் கரீபியன் உல்லாச கப்பல் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இது முட்டாள்தனமான மற்றும் பொறுப்பற்ற செயல். இனி நிக்கோலே நைதேவ் எங்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்'' என்றார்.

நிக்கோலே நைதேவ் போன்றவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நபர்கள் மீது சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அவர்களை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

26166 total views