முட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்ற பெண்ணுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!

Report
1528Shares

கடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு கோடி ரூபாய் பணம் பரிசு கிடைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் தனது தந்தையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு முட்டைகோஸ் வாங்க சென்றுள்ளார்.

அங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அந்த பெண் வாங்கியுள்ளார். அப்போது, முட்டைகோஸில் ஒரு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடியுள்ளார்.

விளையாட்டின் முடிவில் அந்த பெண் 1½ கோடிக்கு ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.

இது குறித்து குறித்த பெண் கூறியதாவது, நான் வெற்றியடைவேன் என்று நினைத்துக்க்கூட பார்க்கவில்லை என கூறியுள்ளார். இந்த பணத்தை வைத்து டிஸ்னி லேண்ட் செல்லவிருப்பதாக அந்த பெண் கூறினார்.

66535 total views