நடுரோட்டில் வாகனத்தை மறித்து காதலை வெளிபடுத்திய இளைஞர்: பொலிசார் செய்த செயல்!

Report
102Shares

தனது காதலை காதலியிடன் தெரிவிக்க காவல்துறை அதிகாரிகளின் உதவியினை நாடிய மியாமி பீச் இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ப்ளோரிடாவின் மியாமி பீச் பகுதியினை சேர்ந்தவர் கென்னத்., இவர் தன் காதலை தன் காதலியிடன் தெரிவிக்க அப்பகுதி காவல்துறையினை அனுகியுள்ளார். இதனையடுத்து காவல்துறையின் உதவியினை பெற்று தன் காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மியாமி பீச் காவல்துறையினர் தங்களு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகளின் படி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனத்தினை காவல்துறையினர் வழிமறித்து நிறுத்துகின்றனர். அதிர்ச்சி முகத்துடன் காரை விட்டு வெளியே வரும் இளம்பெண்ணிடம் காவல்துறை அதிகாரி வாக்குவாதம் நடத்த, அப்போது மோதிரத்துடன் வந்த கென்னத், தன் காதலினை வெளிப்படுத்துகின்றார்.

இச்சம்பவம் அனைவரது கவனத்தினை ஈர்த்திருந்து போதிலும், பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

4291 total views