வயதான முதியவரை நடுவீதியில் இரு இளைஞர்கள் செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் காணொளி

Report
231Shares

அமெரிக்காவில் சீக்கிய முதியவரை அடித்து உதைத்த, நகர காவல்துறை தலைவரின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் மாண்டேகா (Manteca) என்ற இடத்தில் வசிக்கும் சாஹிப் சிங் நாட் (Sahib Singh Natt) என்ற முதியவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, 2 இளைஞர்கள் வாக்குவாதம் செய்து திடீரென தாக்கத் தொடங்குகின்றனர்.

அவர் கீழே விழுந்த பின்பு சிறிது தூரம் நடந்து சென்று விட்டு மீண்டும் வந்து தாக்குகின்றனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, 18 மற்றும் 16 வயதுள்ள 2 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 18 வயதான டைரோன் மெக் அல்லிஸ்டர் (Tyrone McAllister ) மாண்டேகா நகர காவல்துறை தலைவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

7248 total views