கால்டாக்ஸியில் லெஸ்பியன் ஜோடி செய்த செயல்: கார் டிரைவருக்கு நேர்ந்த விபரீதம்!

Report
672Shares

அமெரிக்க நியூயார்க் நகரில் கால்டாக்ஸியில் ஆபாசமாக நடந்து கொண்ட இரு இளம்பெண்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட கால்டாக்ஸி டிரைவருக்கு விதி மீறல் குற்றம் செய்ததாக ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உபர் கால் டாக்ஸியில் டிரைவராக பணிபுரிபவர் அகமத்- இல்- பவுதாரி. இவரது டாக்ஸியில் மின்கட்டன் நகரில் தங்களது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அலெக்ஸ் லோவின் (26) மற்றும் எம்மா பிச்ல் (24) என்ற இரண்டு இளம்பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

கார் பாதி வழியில் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் இருப்பது கூட யோசிக்காமல் அந்த இரண்டு பெண்களும் அடிக்கடி முத்தம் கொடுப்பதில் ஆரம்பித்து ஆபாசமான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதனைப் பார்த்த கார் டிரைவர், அந்த இரு இளம்பெண்களையும் எச்சரித்துள்ளார். ஆனால், அதை கவனிக்காமல் இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டனர். அந்த பெண்கள் லெஸ்பியன் என தெரிய வந்ததையடுத்து டிரைவர் இருவரையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருபெண்களும் உபர் டாக்ஸி நிறுவனத்திடம் டிரைவர் மீது புகார் செய்துள்ளனர். கால் டாக்ஸி விதியை மீறி தங்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியேற்றியதாக கூறினார்கள். இதையடுத்து டிரைவரின் லைசென்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

23384 total views