பிரிட்டன் இளவரசர் சார்லஸிற்கு கொரோனா... தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இளவரசர்

Report
253Shares

பிரித்தானியா இளவரசர் சார்லஸிற்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டும், 422 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இளவரசர் சார்லஸிற்கு(71), கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசரின் மனைவி Camilla-க்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் வைரஸின் அறிகுறி இல்லை என்று கூறப்படுகின்றது.

இதனையடுத்து, அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் யாரிடமிருந்து இவருக்கு வந்தது என்பது தற்போது வரை தெரியவில்லை.