சிகிச்சைக்கு வந்த 25 இளம்பெண்கள்... 5 ஆண்டுகளாக டாக்டர் செய்துவந்த மோசமான செயல்..! அம்பலமான ரகசியம்

Report
239Shares

பிரிட்டனில் மருத்துவர் ஒருவர் 5 ஆண்டுகளாக தன்னிடம் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்ட் நகரத்தைச் சேர்ந்தவர் மனீஷ் ஷா. 50 வயதாகும் இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டுவரை தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 25க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சி நட்சத்திரமான கூடி என்பவரின் வாழ்க்கையைப் பற்றி கூறி இளம்பெண் ஒருவரை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுமட்டுமல்லாது, டபுள் மாஸ்டெக்டோமி என்ற பெண்ணை சிகிச்சையின் மூலம் ஆபாசமாக மேல் கைவத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் மீது சுமத்தப்பட்டுள்ள 21 பாலியல் குற்றச்சாட்டுகளில், 13 குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

வழக்கு தொடங்கிய உடனே மனீஷ் ஷா மருத்துவம் புரிவதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் கிழக்கு லண்டன் நீதிமன்றம் அடுத்த வருடம் பிப்ரவரி 7-ஆம் தேதியன்று தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

8725 total views