4000 பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபர்.. பிரிந்து சென்ற மனைவி.. தற்போதைய பரிதாபநிலை..!

Report
337Shares

பிரித்தானியாவில் போதைப் பழக்கத்திற்கு ஆளான கோடீஸ்வரர், தற்பொழுது தன் சொத்துக்களை இழந்து கூலி வேலை செய்து வருகிறார். பிரித்தானியாவை சேர்ந்தவர் மைக்கேல் கரோல். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. தான் வாங்கிய லாட்டரில் 10 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 92 கோடி) பரிசாக விழுந்தது.

இதனால் மகிழ்ச்சியில் உச்சத்திற்கு சென்ற இவர், தமக்கு கிடைத்த காசை தண்ணி மாதிரி வாரி இரைத்தார். எந்நேரமும் மது, மாது என வாழ்க்கை கழிந்தது. இதனால் வெறுத்துப்போன அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார்.

ஒரு கட்டத்தில் இவரது கஜானா காலி ஆக ஆரம்பித்த்து. காசுக்காக அவருடன் ஒட்டிக்கொண்டிருந்த நண்பர்களும் அவரிடம் இருந்து பிரிந்து சென்றனர். நடுத்தெருவிற்கு வந்த அவர் தற்பொழுது கூலி வேலை செய்து வருகிறார்.

4000 பெண்களிடம் உல்லாசம்

இதுகுறித்து சமீபத்தில் பேசிய மைக்கேல், ஒரு காலத்தில் நான் எப்படி எல்லாம் வாழ்ந்தேன். இப்பொழுது அப்படியே மாறிவிட்டது. போதைக்காக தினமும் சரளமாக செலவு செய்வேன். என் நண்பர்களுக்கு ஏகப்பட்ட பணத்தை செலவு செய்தேன். கிட்டதட்ட 4000 பெண்களுடன் என் படுக்கையை பகிர்ந்துள்ளேன் என கூறினார். ஆனால் என்னிடம் தற்பொழுது பணம் இல்லாததால் அனைவரும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர் என பரிதாபமாக கூறினார்.

இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம், யோசிக்க வேண்டிய நேரத்தில் கூத்தடித்துவிட்டு, எல்லாம் பறிபோன பின்னர் இப்பொழுது யோசித்து ஒன்னும் பிரயோஜனம் இல்லை. காசு மட்டுமே வாக்கையில்லை, இனியாவது உருப்படியான வாழ்க்கையை வாழுங்கள் என மைக்கேலுக்கு பலர் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

8944 total views