குழந்தைக்கு போதை மருந்து கொடுத்து அடித்துக் கொலை செய்த கொடூர தந்தை!

Report
56Shares

பிரிட்டனில் 2 வயது குழந்தை படுகாயங்களுடன் தந்தையால் கொலை செய்யப்பட்ட நிலையில் குழந்தைக்கு போதை மருத்து கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

டயலன் டிபின் பிரவுன் வயது (2) என்ற குழந்தை கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான்.

உடம்பில் வெட்டு காயங்கள்

பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரவுனின் கல்லீரலில் வெட்டு காயங்கள் இருந்ததும் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தை பிரவுனை கொலை செய்ததாக போதை பொருள் கடத்தல்காரரான அவனின் தந்தை ரபில் கென்னடி (31) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வீட்டிலிருந்து ஏராளமான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டது.

சிறுவன் படுக்கையில் படுத்திருந்தபோது எழுந்திரு என அவன் தந்தை கென்னடி கத்தும் வீடியோவையும் பொலிசார் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் பிரவுன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவனுக்கு கொக்கெயின் என்னும் போதை மருந்து வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கென்னடி மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கொலை குற்றத்தை அவர் மறுத்துள்ளார். எனினும் அவர் மீதான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

2452 total views