பிரிட்டனில்.. இறந்தவரை வைத்து குழந்தை பெற்றெடுத்த அதிசயம்!

Report
81Shares

பிரிட்டனில் இறந்த மகனின் விந்தனுவை பயன்படுத்தி தம்பதியர் ஒருவர் வாடகைத் தாயின் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால், மிகுந்த வருத்தத்திலிருந்த அவரின் பெற்றோர் தங்களது வம்சம் விருத்தியடைய வேண்டுமென எண்ணி தங்களது மகனின் விந்தணுவை வைத்து வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தனர்.

இதனால், நிபுணர் ஒருவர் மூலம் இறந்த மகனின் விந்தணு எடுக்கப்பட்டு, உறைநிலையில் பதப்படுத்தினர். ஆனால் அவர்கள் நாட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் ஆகும்.

எனவே அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு சென்று தங்களது மகனின் விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

இதனால் தங்களது வம்சம் அழியாமல் பாதுகாத்துள்ளதாக அந்த பெற்றோர் தெரிவித்தனர்.

3671 total views