சுற்றுலா பயணிகளை ஓட ஓட துரத்தும் கோட்டை... நாம் இறந்தால் இந்த இடத்திற்கு தான் போவோமாம்..

Report
265Shares

மனிதர்கள் இறந்தவுடன் இந்த கோட்டைக்குதான் செல்கிறார்கள். இறப்பின் தன்மை, அவர்களின் புண்ணியங்களைப் பொறுத்து சொர்க்கம், நரகத்துக்கு செல்வார்கள். அந்த சொர்க்கம் ராஜஸ்தானில் இருக்கிறதாம்.

ஆமா.. அங்கு பேய்கள் இருக்கின்றன. பேய் இருக்குனு நம்பிக்கை இருப்பவர்களுக்கு பேய்களை காண ஒரே வழி இந்த கோட்டைக்கு போவதுதான். இருட்டிய பிறகு இந்த இடங்களுக்கு போவது மிகவும் அபாயமானது என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இந்த இடத்தை பற்றி பார்க்கலாம்.

இந்த இடத்தின் பெயர் பாங்கர்க்ட். இது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. தலைநகர் டெல்லியிலிருந்து சரியாக 300 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்தபக்கம் இந்த பக்கம் என எந்த பக்கம் பார்த்தாலும் ஆரவல்லி மலைகளின் ஆக்கிரமிப்பு தான் தெரியும். நாற்புறமும் மலைகளும் நடுவில் கட்டிட உலகின் சாம்ராஜ்யமும் தெரியும்.

சூரிய ஒளிக்கு இந்த பகுதியில் அனுமதி இல்லை. எனவேதான் இது பேய்களின் கோட்டையாக இருக்கிறது. அந்த அளவுக்கு வெளிச்சமின்மையாக இருக்கிறது இந்த கோட்டை. அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் அழுகுரல் கேட்பதாக கூறுகிறார்கள்.

என்னதான் பேயானாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்துக்கு குறைவே இல்லை. மிகவும் பழமையான கோட்டையின் ஹால் மிகவும் பரந்தது. அதை காணும்போது உங்களுக்குள் ஒருவித பயத்தை உண்டுபண்ணும்.

காலையிலிருந்து மாலை 4 மணிக்கு முன்னர் இந்த கோட்டையை காணமுடியும். அதற்கும் தாமதமானால் நீங்கள் பேய்களுடன் நேரிடையாக சண்டையிட வேண்டியிருக்கும். இந்த கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அக்கம்பக்கத்து கிராமத்தினர் எச்சரிக்கை செய்கின்றனர்.

இந்த நகரம் சொர்க்கமாக கருதப்படுகிறது. இறந்தவுடன் வந்து சேரும் இடமாக சொல்லப்படுகிறது. காத்து கருப்பு சுத்திட்டு கெடக்கு இந்த பக்கம் போகாதனு பல படங்களில் காட்டப்படும் பாழடைந்த கோட்டைகளில் ஒன்றுதான் இந்த பங்கார்க் கோட்டை.

சூரியன் உதிக்கும் முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் இந்த சுற்றுலாத் தளத்திற்குள் யாரும் அனுமதிக்கபடுவதில்லை. இதற்கு காரணம் இரவில் கோட்டைக்குள் செல்லபவர்கள் மீண்டும் உயிரோடு திரும்பவதில்லையாம்.

ஆவி நடமாடும் இடங்களின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பன்கர்ஹ் கோட்டையைப் பற்றி தெரிந்திருக்கும். இங்கே தொலைந்து போனவர்களைப் பற்றி பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனைகளை தவிர்க்க, அந்த மாநிலத்தின் அரசாங்கம் ஒரு எச்சரிக்கை பலகையை அதன் நுழைவாயிலில் மாட்டியுள்ளது.

இந்த நகரத்தை கட்டமைத்தவர் அக்பரின் மகனான மன் சிங். இவர் 1631ல் இந்த கோட்டையைக் கட்டினார். பகலில் சுற்றுலா பயணிகள் பேயாவது பிசாசாவது.. வந்து பார் என்பார்களாம். அவர்களை பேய் எதுவும் செய்யாதாம். ஆனால் மாலை நேரத்தில் அவர்களை ஓட ஓட துரத்துமாம்.