இலங்கையில் தாண்டவமாடிய புரெவிப் புயல்! கடலால் சூழப்பட்ட யாழ். நாகர்கோவிலின் ஒரு பகுதி... அச்சத்தில் மக்கள்
வங்காள விரிகுடாவில் உருவான புரெவிப் புயல் பின்னிரவில் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும்
முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்துள்ளது.
மீண்டும் கடும் காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத் தாண்டி முன்னேறி மன்னாரைக் கடந்து தமிழகத் திசையை நோக்கி நகர்ந்தது.
இந்தப் புயல் வடமாகாணங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அதிக மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து கடலுடன் சங்கமித்து கடல்நீர் கிராமத்திற்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.