இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய உரிமைகோரல்..!

Report
176Shares

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்கள் தன்னை தேர்வு செய்யதுள்ளதாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

இதையடுத்து தற்போது, வெற்றிக் கொண்டாட்டங்கள் மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்குள்ளும், பொதுஜன பெரமுனவிற்குள்ளும் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் தொலைபேசியில் கோட்டாவை தொடர்பு கொண்டு, மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வாக்கெண்ணும் நிலையங்களின் முடிவுகளின்படி இரண்டு வேறுபட்ட அறிக்கைகள் மஹிந்த தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டிலும் சற்று வேறுபட்ட வாக்கு எண்ணிக்கை குறிப்பிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு அறிக்கைகளின்படியும் 2- 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தாபய வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.