60 வருடத்திற்கு பின்னர் ஈழத்து தர்ஷனால் அவர் கற்ற பள்ளிக்கு கிடைத்த பெருமை

Report
1443Shares

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரி ஆசிரியையாகவும், சேரன் தலைமை ஆசிரியராகவும் இருக்க, மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாக உள்ளனர்.

இன்று தங்கள் வாழ்வில் பங்களித்த ஆசிரியர் பற்றி அனைவரையும் பகிர்ந்து கொள்ளுமாறு பிக் பாஸ் அறிவித்தார்.

ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இலங்கையை சேர்ந்த தர்ஷன் அவரின் அனுபவங்களை அழகாக பகிர்ந்து கொண்டார்.

துசிதரன் என்ற ஆசிரியர் கூறிய வார்த்தை தான் இந்த அளவு அவர் உயர காரணமாக இருந்துள்ளதாக தெரிவித்தார்.

60 வருடமாக விளையாட்டில் கிடைக்காத ஒரு வெற்றியை தர்ஷசன் படித்த கல்லூரிக்கு விடா முயற்சியினால் பெற்று கொடுத்து சாதனை புரிந்துள்ளார். அதற்கு இந்த ஆசிரியர்தான் உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த வெற்றியின் பின்னர் அவருக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளது. அப்போது தான் ஆசிரியர் கொடுத்த தன்னம்பிக்கையின் மதிப்பு அவருக்கு தெரிந்ததாகவும் கூறினார்.

அது மாத்திரம் இன்றி ஆசிரியருக்கும் அவரின் குடும்பத்திற்கும் நன்றி கூறியுள்ளார்.

loading...