ஏலியன்களால் தாக்கப்படுகிறார்களா இலங்கை தமிழர்கள்? பொலிசாரிடம் குவியும் புகார்கள்

Report
400Shares

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏலியன்கள் (வேற்றுகிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக ) கூறப்படுகின்றது. மேலும் வயல் காடுகளிலும் ஏலியகள் சென்றதாகவும் ஒரு சிலர் தெரிவித்து இருந்தனர்.

இரவு நேரத்தில் தங்களது வயல் காட்டிற்கு செல்லும் போது, குள்ள மனிதர்கள் ( ஏலியன்கள்) ஆங்காங்கே நடமாடுவதை அங்குள்ள தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து பல்வேறு தரப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் தென்மாகாணமான மாத்தாறை மாவட்டத்தில் வசிக்கும், தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் மீது குள்ள மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளர் என்று கூறப்படுகின்றது. அவர்களின் உடல்களில் ஆங்காங்கே பல்வேறு இடங்களிலும் காயங்கள் காணப்படுகின்றது. இதுகுறித்து இலங்கை போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றது.

சிகிரியா மலை:

ராவணன் வாழ்ந்த சிகிரியா மலை அங்கு ஏராளமான விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு விமானதளங்கள் இருந்தாகவும் அடையாளங்கள் காணப்படுகின்றன. இதை வெளிநாட்டினரும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

வேற்றுகிரக வாசிகளுடன் தொடர்பு

ராவணன் வேற்றுகிரக வாசிகளுடன் தொடர்பு வைத்திருந்தாகவும் கூறி வருகின்றனர். அப்போது ராவணன் 24 வகையான விமானங்களை பயன்படுத்தி இருப்பதாக இந்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏலியன்கள்:

இலங்கையில் ராவணன் வாழ்ந்த காலம் முதல் ஏலியன்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏலியன்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இன்று வரை அவிழ்க்க முடியாத மர்மமாக இருக்கின்றது.

இரவு நேரங்களில் மர்ம ஒலி:

சிகிரியா மலைத்தொடர் மட்டும் இல்லாமல் அதன் பகுதியில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுகளில் அப்பகுதியை சுற்றிவருவதாக கூறப்படுகின்றது. அங்கு ஒரு சில ஓசைகளும் கேட்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று வரை இலங்கை வரலாற்றுகளில் முக்கிய இடம் பிடித்து இருந்தாலும் முக்கியமானதாக காணப்படுகின்றது.

விளைநிலத்தில் ஏலியன் முகாம்:

அந்நாட்டின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சோள பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்ற விவசாயி, இரண்டடி உயரமும், நீண்ட தலைமுடியும், சிவந்த முகமும் கொண்ட ஒரு விசித்திர உருவம் வயலுக்குள் நடந்து செல்வதை கண்டதாக மிரண்டு ஓட்டம் பிடித்தார். ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்த போது, அங்கு யாரும் இல்லை.

பறக்கும் தட்டு பயணம்:

இதன்பின்னர் சிலநாட்கள் கழித்து, அனுராதபுரம், பொலநறுவா ஊர்களுக்கு அருகில் இரவு வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்கியதை பலரும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அங்கு ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இரண்டு தகவல்களையும் இணைத்து பரவும் தகவல்களால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குள்ள மனிதர்கள் நடமாட்டம்:

இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குவிந்த புகார்கள்:

மாத்தறை - தொட்டமுன பகுதியில் நேற்றிரவு சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாத்தறை போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

தமிழர்கள்- சிங்கர்கள் புகார்:

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் தங்கள் மீது குள்ள மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எங்களின் உடல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தனர். இந்த தாக்குதல் இரவு நேரத்தில் அவர்கள் நடத்தியதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறித்த விபரமும் வெளியிடப்படவில்லை.

குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஆய்வு:

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து வெளியான செய்திகள் தொடர்பில் தாம் விடயங்களை ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும், நாட்டிற்குள் அவ்வாறு எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.

உண்மை நிலை:

இந்த நிலையில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்தில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

12391 total views