கொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்!

Report
1929Shares

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் வீதியில் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த மக்களுக்கு குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை சுற்றிவளைத்த மக்கள் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் யோசனையை கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து எச்சரிக்கும் வகையிலான இரு தொலைபேசி அழைப்புகள் ஆசு மாரசிங்கவுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

loading...