உலகத்துக்கு ஒரே கடவுள்!! சுற்றி திரியும் மோட்டார் சைக்கிளினால் இலங்கையில் பரபரப்பு.. புகைப்படம் உள்ளே

Report
2345Shares

கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் சுற்றி திரிவதாக பொலிஸார் இன்று பகல் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது “உலகத்துக்கு ஒரே கடவுள்” என்ற வாசகம் எழுதப்பட்ட நிலையில கொழும்பில் சுற்றி திரிவதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அலுமினிய தகடுகளால் சுற்றப்பட்ட நிலையில் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி, வான், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கொழும்பில் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், “உலகத்துக்கு ஒரே கடவுள்” என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும் கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருகின்றது எனவும், அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 321க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

74187 total views