இலங்கை தேவாலயத்தில் குண்டு வெடிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக...! நெஞ்சை பதைபதைக்க செய்யும் புகைப்படங்கள்

Report
1327Shares

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களும், புகைப்படங்களும் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றன.

சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பாக அதாவது சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னர் தேவாலயத்திற்குள் சிறார்கள் இறைவனுக்காக பாடல் பாடி, நடனமாடியுள்ளனர்.

கொடூர குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இறைவன் உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு குறித்த சிறார்கள் மகிழ்ச்சியுடன் கழித்த தருணங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் சீயோன் தேவாலயத்தில் வெளிப்புறமாகவே குண்டு வெடிப்பு நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, நேற்று தேவாலய குண்டு வெடித்து அதில் உயிரிழந்தவர்களின் ரத்தம் தேவாலயத்திலுள்ள ஏசுநாதர் சிலை ஒன்றில் தெறித்துள்ளது.

அந்த புகைப்படமும் உலகையே பதைபதைக்க செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

55844 total views