பொம்மை தலைகளால் இலங்கையில் பதற்றம்! 1000 ரூபாய் நாணயத்தாள்களுடன் வைக்கப்பட்ட வெடி குண்டு

Report
2049Shares

கொழும்பு - கொச்சிக்கடையில் இன்று வானொன்றிலிருந்து குண்டானது பாதுகாப்பு தரப்பினரால் செயழிலக்கப்பட்டது.

இது குறித்து பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர்.லத்தீப் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த வானுக்குள் 4 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இணைத்து பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குண்டு நூல் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் அருகில் 1000 ரூபாய் நாணயத்தாள்கள் கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாணயத்தாள்களை காண்பவர்கள் அதனை எடுக்க முற்படும் போது குண்டை வெடிக்க வைப்பதற்கான அமைப்பிலேயே குறித்த குண்டில் நூல் இணைக்கப்பட்டிருந்ததாகவும் எம். ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கையில் கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நேற்று முதல் இலங்கையில் தொடரும் பதற்ற நிலை காரணமாக ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதேவேளை, இலங்கைக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

70754 total views