இலங்கையில் இன்று 9வது குண்டு வெடிப்பு.. வெளியான அதிர்ச்சிக் காட்சி!

Report
3459Shares

இலங்கையில் கொச்சிக்கடாவில் நிகழ்ந்த ஒன்பதாவது குண்டு வெடிப்பு குறித்த பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களும் தற்போது வெளியாகி வருகிறது.

இலங்கை கொழும்புவில் நேற்று தொடர்ந்து பெரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. நேற்று 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது இன்னொரு பகுதியில் குண்டுவெடித்துள்ளது. நேற்று குண்டு வெடித்த கொச்சிக்கடாவில்தான் இன்றும் குண்டு வெடித்துள்ளது. அங்கிருக்கும் சர்ச்சுக்கு வெளியே இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை, உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பதாவது குண்டுவெடிப்பு அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்த பக்கத்தில் வீட்டில் உள்ள இளைஞர்கள் இதை வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இந்த கார்தான் நேற்று கொச்சிக்கடா பகுதியில் புனித ஆண்டனி சர்ச் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஆகும். நேற்றே இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. அதிலும் இந்த கார் இருந்தது. அதாவது நேற்று இந்த காரில்தான் வெடிகுண்டு வைத்த தீவிரவாதி சர்ச்சுக்கு வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அந்த தீவிரவாதி, தான் வந்த காரிலும் வெடிகுண்டை வைத்துவிட்டு அவன் தேவாலயத்திற்குள் சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள். அதுதான் தற்போது வெடித்துள்ளது. இந்த காரை மிக சரியான நேரத்தில் போலீசார் கண்டுபிடித்த காரணத்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதில் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

loading...