இலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி! உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்

Report
2752Shares

இலங்கை வெடிகுண்டு தாக்குதலின் தாக்கத்தை மக்கள் மனதில் பதிய வைக்க இந்த ஒரு சக்தி வாய்ந்த படம்போதும் என்று, கூறி சமூக வலைத்தளத்தில் ஒரு போட்டோ வைரலாக சுற்றி வருகிறது.

ஈஸ்டர் திருநாளான இன்று, இலங்கையில் தேவாலயங்கள் மற்றும், வெளிநாட்டினர் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து அடுத்தடுத்து தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 5 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. மொத்தம் ஆறு இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.

மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அதன்பின் 6 அணி நேரமா கழித்து இன்னும் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் தேவாலய பிரார்த்தனைகளில் பங்கேற்க சென்ற கிறிஸ்தவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம் தேவாலயத்திலுள்ள ஏசுநாதர் சிலை ஒன்றில் தெறித்துள்ளது. இந்த புகைப்படம்தான் வைரலாகியுள்ளது.

ஏசுநாதரை சிலுவையில் அறைந்தபோது, "பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே " என்று ஏசுநாதர் பெருமனதோடு, தெரிவித்தார் என்பது நம்பிக்கை. இப்போது இந்த புகைப்படத்திற்கும், அதே வரிகள் பொருந்துவதாக கூறுகிறார் இந்த நெட்டிசன்.

எனவே தான் இந்த புகைப்படம் இன்றைய நாளின் சக்தி வாய்ந்த புகைப்படமாக பார்க்கப்படுகிறது.

“இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன." என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.