இலங்கையில் நிகழ்ந்த பாரிய பயங்கரம்... குண்டு வெடிப்பில் 160 பேர் பலி!

Report
1194Shares

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. மொத்தம் ஆறு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.

மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதில் 280க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

loading...