ஈழத்தின் நந்திக்கடலில் திடீரென கொத்து கொத்தாக செத்து மடியும் மீன்கள்! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே

Report
145Shares

முல்லைத்தீவு - வட்டுவாகல் மற்றும் நந்திக்கடல் பாலத்திற்கு அருகில் பெருந்தொகையான மீன்கள் இத்தினங்களில் உயிரிழப்பதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக நீர் வெப்பமடைந்து இந்த மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆற்றுப்பகுதியில் நீர் வற்றி காணப்படுவதுடன், மீன்கள் கொத்து கொத்தாக மடிந்து கரையொதுங்கியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இப்பகுதியில் மீன்கள் உயிரிழப்பதால் மீனவர்கள் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

4477 total views