தேங்காய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்! இலங்கையில் நடந்த அதிசயம்?

Report
529Shares

இலங்கையில், களுத்துறை மாவட்டத்தில் தேங்காய் ஒன்றினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்ட அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வலல்லாவிட்ட பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று காரணமாக பாரியளவில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளன.

இதன்போது வலல்லாவிட்ட அவித்தாவ வீதியில் ஊழியர்களினால் வீதி நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காற்றினால் விழுந்து கிடந்த தேங்காய் ஒன்றை கண்ட சாரதி ஒருவர் அதனை எடுப்பதற்காக பவுசர் ஒன்றின் உதவியாளரை கீழே இறக்கியுள்ளார்.

அந்த தேங்காய் எடுக்க சென்ற சந்தர்ப்பத்தில் பவுசரின் வேகம் குறைக்கப்பட்டு முன்னால் சென்றுள்ளது. இதன் போது, அங்கிருந்த பாரிய மரம் ஒன்று பவுசர் மீது உடைந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக யாரும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

அந்த மரம் பவுசர் மீது விழவில்லை என்றால் அருகில் இருந்த கடை மற்றும் வீடுகள் மீது விழுந்து பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த தேங்காய் தான் இந்த உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பவுசரின் சாரதி தெரிவித்துள்ளார்.

17799 total views