தோண்டத் தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடு! 13 நாட்களாக தொடரும் பதற்றம்?..அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்

Report
326Shares

இலங்கையின் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 13 ஆவது நாளாக மனித எலும்பு அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய தினம் மனித எலும்பு அகழ்வு பணிகளின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று 12 ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக 'தொல்பொருள்' அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை(13) காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13 ஆவது நாளாகவும் ஆகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

11258 total views