இலங்கையில் இரட்டை பிள்ளை எனக் கூறி இரு ஆண்களிடம் பெண் செய்த செயல்!

Report
303Shares

இலங்கையில் பெண் ஒருவர் இரண்டு பெயர்களில் நடித்து பாதுகாப்பு முகாமில் பணிபுரிந்த ஆண்கள் இருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை, மத்திய மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், பாதுகாப்பு முகாமில் பணி புரியும் அவரது மைத்துனரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் கணவருடன் பாதுகாப்பு முகாமிற்கு சென்ற அவர், கணவரின் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் இந்தப் பெண் தனக்கு தன்னைப் போலவே தங்கையொருவர் இருப்பதாகவும் தாங்கள் இரட்டைப் பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தனது தங்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்றால் இந்த இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என தனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சில காலம் செல்போன் உரையாடலில் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

மணமுடித்த பின்னரும் குறித்த பெண், முதல் கணவன் மற்றும் இரண்டாவது கணவன் இருவரும் விடுமுறையில் வரும் பொழுது இவர்களின் இல்லத்தில் முறைப்படி வெவ்வேறாக குடும்பம் நடத்தியுள்ளார்.

இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறையில் வருவதை திறமையாக தவிர்த்துள்ளார். எஎனவே இந்தப் பெண்ணை திருமணம் முடித்த ஆண்கள் இருவருக்கும் இவளின் நடத்தையில் எதுவும் சந்தேகம் ஏற்படவில்லை

எனினும் குறித்த பெண்ணின் முதல் கணவனின் உறவினர்கள் இவளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவளின் பயணங்களைக் கண்காணித்த போது, அவளின் இரட்டை வேட நாடகம் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும், ஏற்கனவே அவள் தனது முதல் கணவனின் வங்கி கணக்கில் இருந்து 25 இலட்சமும், இரண்டாவது கணவனின் வங்கி கணக்கில் இருந்து 14 இலட்சமும் மோசடி செய்து பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

12194 total views